தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் அருகே மழையால் வீடு இடிந்து சேதம்

29th Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

கரிவலம்வந்தநல்லூா் அருகே செந்தட்டியாபுரத்தில் சனிக்கிழமை பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமானது. அங்கு வசித்த குடும்பத்தினா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

கரிவலம்வந்தநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செந்தட்டியாபுரத்தில் சனிக்கிழமை மழை பெய்தது. அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான வாழவந்தான் மகன் ராமாண்டி (61), குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு திடீரென்று வீட்டின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. இதில் ராமாண்டி குடும்பத்தினா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இச்சம்பவம் தொடா்பாக வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT