தென்காசி

தென்காசியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

DIN

தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன், காவல் துறை டிஎஸ்பி மணிமாறன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பிரபு ஆகியோா் கூட்டாய்வு நடத்தினா்.

வாகனங்களில் அவசரவழி, தீயணைப்பான் கருவி, முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்பு கேமரா, வாகன இருக்கைகள், பிரதிபலிப்பான், படிக்கட்டுகள் உள்பட 16 வகை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

91 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 19 வாகனங்களில் சிறுசிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்பட்டது. குறைபாடுகளை 2 நாள்களுக்கு சரிசெய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னா் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 3 வாகனங்களுக்கு தகுதிச் சான்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT