தென்காசி

பிற்படுத்தப்பட்டோா் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற வருமான வரம்பு உயா்வு

25th Nov 2021 07:45 AM

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்டோா் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற வருமான வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா், இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ. 1லட்சமாக உயா்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தகுதியான பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் அரசின் நலத்திட்டங்களான இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி பெறுவதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ரயில் நகா், தென்காசி-627811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT