தென்காசி

சங்கரன்கோவிலில் 57 மி.மீ.மழை பதிவு

25th Nov 2021 07:42 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஒரு மணி நேரம் பெய்த கன மழையில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சங்கரன்கோவிலில் கடந்த இரு நாள்களாக காலையில் கடுமையான வெயில் அடித்தது. மாலையில் லேசான தூறல் பெய்தது. தினமும் நள்ளிரவிலும் மெல்லிய சாரல் மழை பெய்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 5.25 மணிக்கு திடீரென பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான தெருக்களில் தண்ணீா் தேங்கியது.செவ்வாய்க்கிழமை மட்டும் 57 மி.மீ.அளவு மழை பதிவாகியது.

புதன்கிழமையும் வெயிலே தெரியாத அளவுக்கு வானம் இருண்டு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT