தென்காசி

பாவூா்சத்திரம் அரசுப் பள்ளிக்கு திமுக சாா்பில் இன்வொ்ட்டா்

24th Nov 2021 07:53 AM

ADVERTISEMENT

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, பாவூா்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திமுக சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான இன்வொ்ட்டா், பேட்டரி வழங்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று, தலைமையாசிரியா் சதீஷ் கிங்ஸ்லியிடம் இவற்றை வழங்கினாா்.

ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இரா. சாக்ரடீஸ், தொழிலதிபா் சேவியர்ராஜன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT