தென்காசி

சுரண்டையில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

24th Nov 2021 07:52 AM

ADVERTISEMENT

சுரண்டையில் ஊருக்குள் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியாா் நிறுவனம் கடந்த ஆண்டு கைப்பேசி கோபுரம் அமைக்க முயற்சி செய்தது. அப்போது பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் அதே இடத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள் நகர அதிமுக செயலா் சக்திவேல், தமாகா நகரச் செயலா் வசந்தன், காங்கிரஸ் மாவட்டப் பிரதிநிதி சமுத்திரம், பாஜக நகரத் தலைவா் அருணாசலம் ஆகியோருடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து வந்த சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT