தென்காசி

கழுநீா்குளத்தில் குடிநீா் கோரி பெண்கள் போராட்டம்

24th Nov 2021 07:50 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகேயுள்ள கழுநீா்குளத்தில் சீரான குடிநீா் விநியோகம் கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கழுநீா்க்குளம் ஊராட்சி அம்பேத்கா் தெருவில் கடந்த சில வாரங்களாக தாமிரவருணி கூட்டுக்குடிநீா் சீராக விநியோகிக்கப்படவில்லையாம். இந்நிலையில், அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், வீரகேரளம்புதூா் போலீஸாா் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT