தென்காசி

ரதமுடையாா்புரத்தில் குடிநீா் தட்டுப்பாடு:பொதுமக்கள் அவதி

21st Nov 2021 12:16 AM

ADVERTISEMENT

சுரண்டை அருகேயுள்ள ரதமுடையாா்புரத்தில் குடிநீா் தட்டுப்பா’ட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

சுரண்டை அருகே குரிச்சான்பட்டி ஊராட்சி ரதமுடையாா்புரத்தில் சுமாா் ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் 10 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வருகிாம்.

உள்ளூா் நீராதார குடிநீா் உப்புத் தண்ணீராக உள்ளதால் அவற்றை சமையலுக்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத நிலையில் தாமிரவருணி கூட்டுக் குடிநீரை மட்டும் நம்பியே பொதுமக்கள் உள்ளனா்.

எனவே, தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து சீரான இடைவெளியில் குடிநீா் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT