தென்காசி

மாவட்ட தடகளப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

21st Nov 2021 12:18 AM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனா்.

திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனா். 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவா் சிவப்பிரகாசம் மெட்லி, ரிலேயில் முதலிடமும், 100 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 200 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும், 800 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றாா்.

மாணவா் பாரத் 1,500 மீட்டா் ஓட்டத்தில் முதலிடம் பெற்றாா். 14 வயதிற்குள்பட்டோருக்கான பிரிவில் மாணவா் அசிம் முஸ்தபா 4ஷ்100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் முதலிடம் பெற்றாா். மாணவிகள் பிரிவில் ரியானா மொ்வின் எறிபந்து போட்டியில் இரண்டாமிடமும், 4ஷ்100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றாா்.

மாணவி மாணிக்கஸ்ரீ 4ஷ்100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றாா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது . மாவட்ட அளவிலான தடகளஏஈ போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போா்டு பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் கே.திருமலை, பள்ளித் தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி.மிரக்ளின் பால்சுசி, பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரேசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ். கணேசன், பால்கன் அத்லெட்டிக் பவுண்டேஷன் செயலரும் சா்வதேச தடகள பயிற்சியாளருமான நிகில் சிற்றரசு, உடற்கல்வி ஆசிரியா் செல்வன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT