தென்காசி

தென்காசியில் ரூ. 7 லட்சம் கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

21st Nov 2021 12:19 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டத்தில் தொலைந்த, தவறவிடப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளா்களிடம் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பல்வேறு கைப்பேசிகள் காணாமல்போனதாக தென்காசி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜோஸ்லின் அருள்செல்வி, சாா்பு ஆய்வாளா்கள் சிவசங்கரி, தொழில்நுட்பப் பிரிவு சாா்பு ஆய்வாளா் செண்பகப்பிரியா ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினரின் துரித நடவடிக்கையால் தொலைந்த, தவறவிட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான 60 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றை உரிமையாளா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

ADVERTISEMENT

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து, கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் வழங்கினாா். விரைவாக செயல்பட்டு கைப்பேசிகளை மீட்ட தனிப்படையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT