பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் வழியாக சென்னை சென்ற தீபாவளி சிறப்பு ரயிலுக்கு மரக்கன்று கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு பாவூா்சத்திரம், தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பாவூா்சத்திரம் வழியாக சென்னை சென்ற இந்த ரயிலுக்கு கல்லூரணி ஊராட்சித்தலைவா் ராஜ்குமாா் தலைமையில் ஊா் பொதுமக்கள், ரயில் பயணிகள் வரவேற்பு அளித்தனா். ரயில் எஞ்ஜின் ஆபரேட்டா், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், புத்தகங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், சேவியர ராஜன், ரயில் பயணிகள் சங்கத்தைச் சோ்ந்த பாண்டியராஜா, மாரியப்பன், தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.