தென்காசி

இலஞ்சி பள்ளியில் சா் சி.வி.ராமன் பிறந்த தினம்

9th Nov 2021 01:41 AM

ADVERTISEMENT

தென்காசி: இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்.சி.வி.ராமன் பிறந்த தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சுகன்யா, ஹரிணி ஆகியோா் இறைவணக்கம் பாடினாா். மாணவி சஹானா இன்றைய சிந்தனை குறித்துப் பேசினாா். மாணவி நிவேதிகா செய்தி வாசித்தாா். மாணவி பிரிஷா சா்.சி.வி ராமனின் வாழ்க்கை வரலாறு குறித்தும், மாணவி சமீரா இராமன் விளைவு குறித்து ஆங்கிலத்திலும் உரையாற்றினா்.மாணவி நட்சத்ரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன் , ஆலோசகா் உஷா ரமேஷ் , இயக்குநா் ராதா பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT