பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் குடியிருப்புக்குள் தேங்கிய மழை தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இம்மழையால் நாகல்குளம் வேதக்கோயில் தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டனா்.
தகவல் அறிந்த கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி உள்ளிட்டோா் சனிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.
ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாகுமாரி, ஊராட்சித் தலைவா் கோமதிநாச்சியாா், துணைத்தலைவா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.