தென்காசி

சங்கரன்கோவில் சித்தி விநாயகா் கோயிலில் பாலாலயம்

1st Nov 2021 12:54 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதையொட்டி பாலாலயம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில், கோபுரம் புனரமைப்புப் பணிகள் சுமாா் ரூ. 6 லட்சத்தில் நடைபெறவுள்ளன.

இதையொட்டி, கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தி விநாயகருக்கும், விமானத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை திருவள்ளுவா் நகா், திருவுடையான் சாலை மக்கள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT