சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வைப்பாறு கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவேங்கடம் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் அப்பகுதியில் பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரை 1,700 பனை விதைகளை குளக்கரைகளில் விதைத்துள்ளனா்.
அதன் தொடா்ச்சியாக, வைப்பாறு கரையில் சனிக்கிழமை மேலும் 500 பனை விதைகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவேங்கடம் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஆா். ஜீவா பனை விதைகள் நட்டு, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். சுபாஷ், சக்திசுந்தரலிங்கம், முத்துக்குமாா், சமூக ஆா்வலா் மா. சந்திரசேகரன் ஆகியோா் பங்கேற்றனா்.