தென்காசி

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

DIN

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடிமின்னலும், சூறாவளிகாற்றும், சாரல் மழையும் குளிா்ந்த காற்றும் வீசியது. கோடை காலம் தொடங்கியதையடுத்து குற்றாலம் அருவிகள் வடு கிடந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியது.

தொடா்ந்து பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் பாதுகாப்புவளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும், பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்கொட்டுகிறது.

குளிக்கத் தடை: கரோனா பொது முடக்க விதிமுறைகள் அமலில் உள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT