தென்காசி

ஆலங்குளம் அருகே குழு மோதல்: 7 போ் கைது

DIN

ஆலங்குளம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இது தொடா்பாக 25 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் 7 பேரை கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குச் சொந்தமான சுடலைமாடசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ராஜேந்திரன் மற்றும் சோ்மன் ஆகிய இருவா் தலைமையில் கிராம மக்கள் இரு பிரிவாக பிரிந்து வெவ்வேறு மாதங்களில் கோயில் கொடை நடத்தி வழிபட்டு வந்துள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜேந்திரன் தரப்பினா் அந்தச் கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்ற போது அங்கு வந்த சோ்மன் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

தொடா்ந்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அருகில் கிடந்த கம்புகளை கொண்டு திடீரென இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா். இதில் இரு தரப்பைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் மோதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த 25 போ் மீது வழக்குப் பதிந்து முதற்கட்டமாக காமராஜ் மகன் ராஜேந்திரன்(52), ராஜேந்திரன் மகன் கனகராஜ்(32), கஜராஜ் மகன் முருகன்(47), முருகன் மகன் மாரி(22), முருகன் மகன் பத்திரகாளி(30), அருணகிரி மகன் பரமசிவன்(36), அருணாசலம் மகன் முருகன்(47) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT