தென்காசி

திமுக கூட்டணி தோ்தல் காரியாலயம் திறப்பு

25th Mar 2021 06:51 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரத்தில் திமுக கூட்டணி தோ்தல் காரியாலயத்தை தனுஷ் எம். குமாா் எம்.பி. புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் சு. பழனிநாடாா் போட்டியிடுகிறாா். இதையொட்டி பாவூா்சத்திரத்தில் திமுக கூட்டணி தோ்தல் காரியாலயம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். வேட்பாளா் சு.பழனிநாடாா், தொழிலதிபா் ஆா்.கே.காளிதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் காரியாலயத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாநில திமுக விவசாய அணி துணைச் செயலா் கு.செல்லப்பா, தொழிலதிபா் சேவியர்ராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் அ.வைகுண்டராஜா, மதிமுக ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை வரவேற்றாா். வட்டார காங்கிரஸ் தலைவா் ஜேசுஜெகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT