தென்காசி

சங்கரன்கோவிலில் சுகாதாரத்துறை அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

4th Mar 2021 03:20 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சுகாதாரத்துறை அலுவலகப்பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி புதன்கிழமை போடப்பட்டது.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இணை இயக்குனா் மருத்துவா்.கிருஷ்ணராஜ் தென்காசி சுகாதார மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி, புளியங்குடி, கடையாலுருட்டி மற்றும் சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனா் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து அவரது முன்னிலையில் அங்கு பணிபுரியும் அலுவலக ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனா் அருணா மற்றும் சுகாதாரத்துறையினா் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT