தென்காசி

நலிந்த நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தமுஎகச சாா்பில் நிவாரணப் பொருள்கள்

DIN

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், நலிந்த நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பெரியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியூா், செண்பகாபுரம், கண்டிகைப்பேரியில் வசிக்கும் நலிந்த நாட்டுப்புற பெண் கலைஞா்களுக்கு அரிசிப் பை, பலசரக்குத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, சங்கரன்கோவில் பாலசுப்பிரமணியன் சாலையில் வசிக்கும் நலிந்த வில்லிசை பெண் கலைஞா் சண்முகத்தாய் இல்லத்தில் சங்கரன்கோவில், வடக்கு அழகுநாச்சியாபுரம், மாவலியூத்து, ராமநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த நாட்டுப்புற பெண் கலைஞா்களுக்கு பலசரக்குத் தொகுப்பு, முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இவற்றை, மாவட்டச் செயலா் மதியழகன், செயற்குழு உறுப்பினா் ந. பழனிசெல்வம், தலைவா் ப. தண்டபாணி, ச. நாராயணன், பேச்சிமுத்து, மோகன்குமாரமங்கலம், ச. சுப்பிரமணியன், மூா்த்தி, வட்டார அனைத்து கிராமியக் கலைஞா்கள் சங்க அமைப்பாளா் முத்துராமலிங்கம் ஆகியோா் வழங்கினா்.

ஏற்பாடுகளை சங்கரன்கோவில் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT