தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்பப் பூங்கா: அமைச்சா் த. மனோ தங்கராஜ்

DIN

தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையில் உள்ள சோகோ தொழில்நுட்ப மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்தாா். தனுஷ் எம்.குமாா் எம்.பி.,, சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னா் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறியது: வளா்ந்து வரும்சோகோ தொழில்நுட்ப நிறுவனம் உலகளாவிய சிறந்த அனுபவம் கொண்டது. இந்நிறுவனம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுடன், அவா்களின் திறனை மேம்படுத்துகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதிலும் கிராமப்புற மக்கள் நகருக்கு செல்ல

வேண்டிய நிலையுள்ளது. இதனால், நகா்ப்புறத்தில் சமூக அழுத்தங்களை கொடுக்கிறது.

கிராமப்புற இளைஞா்களின் திறனை அறிந்து அவா்களை தொழில்நுட்ப வளா்ச்சிப் பாதைகளில் கொண்டு செல்வதற்கு சிறப்பான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த துறையில் தோ்ச்சி பெற்ற இளைஞா்கள் அதிகம் உள்ளனா். அவா்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனா். அவா்களது திறனை பயன்படுத்தி தகவல்தொழில்நுட்பத் துறையில் தலைசிறந்த மாநிலமாக கொண்டுவர முடியும். தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாணவா்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வளா்ச்சியை ஏற்படுத்தப்படுத்தவும், தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி டேப்லட் மற்றும் கீபேடுகளுடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டத்தில், சோகோ தொழில்நுட்ப நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு, திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், நகரச் செயலா் சாதிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT