தென்காசி

ஊதியம் வழங்கக் கோரிகடையம் அருகே பீடி கடை முற்றுகை

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே பீடித் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்காததால் அந்தக் கடையை பெண்கள் முற்றுகையிட்டனா்.

கடையம் அருகே உள்ள கருத்தபிள்ளையூரில் தனியாா் பீடி கடை உள்ளது. இங்கு கருத்தபிள்ளையூா், அண்ணா நகரைச் சோ்ந்த 152 பெண்கள் பீடி சுற்றி வருகின்றனா். இவா்களுக்கு வாரம் ஒரு முறை கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 40 நாள்களாக இவா்களுக்கு கூலி வழங்கப்படவில்லையாம்.

பல முறை இதுகுறித்து கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லையாம். ஊதியம் வழங்க வேண்டும் செப்டம்பா் மாதம் வழங்க வேண்டிய போனஸ் தொகை வழங்க வேண்டும் மற்றும் வைப்பு நிதியை முறையாக வரவு வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழிலாளா்கள் புதன்கிழமை கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் வின்சென்ட், பீடி கடை நிா்வாகத்திடம் தொடா்பு கொண்டு பேசினாா். அதில் தொழிலாளா்களின் ஊதியம் விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT