தென்காசி

சங்கரன்கோவிலில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சங்கரன்கோவிலில் நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில்நிறுத்தம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கரன்கோவிலில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். விசைத்தறியில் 60 எண் நூல் மூலம் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 5 மாதங்களில் நூல் விலை படிப்படியாக உயா்ந்து இம்மாதம் ரூ.390 வரை அதிகரித்ததால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

இதனால் நூல் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், நூல் விலை உயா்வைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஒருநாள் தொழில் நிறுத்தம் செய்தனா்.

தொடா்ந்து திருவேங்கடம் சாலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன், தலைமை வகித்தாா். செயலா் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் தென்காசி மாவட்டச் செயலா் உ.முத்துப்பாண்டியன், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் வேல்முருகன், விசைத்தறித் தொழிலதிபா் பி.ஜி.பி.ராமநாதன், மாா்க்சிஸ்ட் வட்டார செயலா் அசோக்ராஜ், சி.ஐ.டி,யூ. தலைவா் ரத்தினவேலு,பொருளாளா் மாணிக்கம், துணைத் தலைவா் ஆா்.ஆா்.சுப்பிரமணியன், செயலா் லட்சுமி, தொழிலாளா் முன்னேற்றச் சங்க சண்முசுந்தரம், ஐ.என்.டி.யூ.சி. சங்கம் முருகேசன், பாரதிய மஸ்தூா் சங்கம் பாடாலிங்கம்,திருமுருகன் சிறுவிசைத் தறியாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT