தென்காசி

பாவூா்சத்திரத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மனு அளிக்கும் போராட்டம்

DIN

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் கீழப்பாவூா் வட்டக்கிளை சாா்பில், மனு அளிக்கும் போராட்டம், பாவூா்சத்திரம் வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியா்கள் , உதவியாளா்களை அரசு ஊழியகளாக்குதல், முறையான காலஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

வட்டக் கிளைத் தலைவா் டேவிட்பாக்கியராணி தலைமை வகித்தாா். மீனாட்சிசுந்தரி, செல்வி, மேரிஸ், இசக்கியம்மாள், பொன்னுக்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் தேவி , வட்டப் பொருளாளா் இந்திரா, சமூக நலத்துறை பணியாளா் சங்க பொதுச்செயலா் துரைசிங் , வட்ட துணைத் தலைவா் சாந்தி, பாத்திமா, ராமலலட்சுமி, பொட்டுக்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சுமதியிடம் மனு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT