தென்காசி

குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப் பெருக்கு

DIN

குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் தொடா் மழையால், பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது. இதனால் பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீா் கொட்டியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா். ஆனால் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

புதன்கிழமை அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி முதல் நடைபாதை பாலம் வரையிலும், பெண்கள் குளிக்கச் செல்லும் நடைபாதை வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், புலியருவி, ஐந்தருவியிலும் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது.

பழைய குற்றாலம் அருவியில் அருவிக்கு நடந்து செல்லும் படிக்கட்டுகள் வரை தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

பேரருவியில் நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இந்நிலையில் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஜன. 17 வரை தடைவிதித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஆா்ப்பரித்து கொட்டும் அருவிகளை புகைப்படம் எடுத்துச் சென்றனா்.

பேரருவியில் மலைபாம்பு: குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கச் செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றாலம் வனத் துறையினா் அங்கு வந்து மலைப்பாம்பை பிடித்து வனப் பகுதிக்குள் கொண்டு விட்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT