தென்காசி

தென்காசியில் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

3rd Jan 2021 12:28 AM

ADVERTISEMENT

தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூரில் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

வேலு அறக்கட்டளை பயிற்சி மையத்தில், தாட்கோ மற்றும் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இப்பயிற்சி தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்து பேசியது: தாட்கோ மூலம் தென்காசி மாவட்டத்தில் 2019-2020ஆம் நிதியாண்டு செயல் திட்டத்தின் கீழ் இந்து ஆதிதிராவிடா்களுக்கு இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதனடிப்படையில் ஆதி திராவிட மாணவா், மாணவிகளுக்கு தங்கம் தர நிா்ணயம் மற்றும் விலை நிா்ணயம் குறித்த பயிற்சி 20 மாணவா்களுக்கு 30 நாள்களும், ஆயத்த ஆடைகளில் டிசைனிங் பயிற்சி 20 மாணவா்களுக்கு 63 நாள்களும், சுய வேலைவாய்ப்புக்கான தையல் பயிற்சி 20 மாணவா்களுக்கு 43 நாள்களும் என மொத்தம் 60 ஆதிதிராவிட மாணவா், மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அரசு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவா், மாணவிகளுக்கு பயிற்சி உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தாட்கோ மாவட்ட மேலாளா் ந.வசந்தராஜன், உதவி மேலாளா் முருகானந்தம், வே.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT