தென்காசி

நரேந்திர மோடி சிறுதொழில்களை அழித்து வருகிறார் : ஆலங்குளத்தில் ராகுல் பேச்சு

DIN

நரேந்திர மோடி சிறுதொழில்களை அழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி ஆலங்குளத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, ஆலங்குளம் பகுதி பீடித் தொழிலாளர்கள், விவசாயிகள் பகுதியாக உள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்புகளை சிறு தொழில்கள் வழங்கி வருகின்றன. சிறு தொழில்கள் தான் வேலைவாய்ப்பிற்கு முதுகெலும்பாக உள்ளது. அந்த முதுகெலும்பை நரேந்திர மோடி நசுக்கி அழித்து வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. பீடி தொழில் போன்ற சிறுதொழில்களை அழித்து வருகின்றன. 

முக்கிய தொழில்களை சில முதலாளிகளிடம் உள்ளன. சிறு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் போராடி தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்தை அழித்து வருகிறார். நரேந்திர மோடி விவசாயத்தையும், சிறுதொழில்களையும் அழித்து வருகிறார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கேலி செய்து அழித்து வருகிறார்.  இந்தியா ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே வரலாற்றை உடையது என்று சொல்லி வருகிறார்.

தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா, தமிழ் கலாச்சாரம் இல்லையா, தமிழ் வரலாறு இந்தியாவின் வரலாறு இல்லையா. ஆனால் மோடி ஒரே மொழி, கலாச்சாரம், மதம் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை ஏமாற்றம் தருவதாக உள்ளது. அவர் மோடியை கேள்வி கேட்பதைத் தவிர்த்து, அவரின் மடியில் சாய்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மோடியை துதி பாடி வருகிறார்.

தமிழக அரசை தொலைக்காட்சியைப் போன்று ரிமோட் மூலம் இயக்கி வருகிறார். தமிழ்நாட்டு அரசியல் என்பது தமிழக மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் நேர்மையான கலாச்சாரத்தைக் கொண்டவர்களாவர். தமிழ் மொழி, கலாச்சாரம், மக்களை மோடி பாராட்ட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களை மதிக்க வேண்டும். மத்திய அரசு மதிக்கும் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஏழைகளையும், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரவணைக்கும் ஆட்சி அமைய வேண்டும்.

இந்திய மக்கள் பயன்படுத்தும் செல்பேசி சீனாவில் தயாரித்ததாக உள்ளது. காலணி, சட்டை உள்ளிட்டவையும் சீனாவின் தயாரிப்பாக உள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பொருள்களைத் தான் நான் விரும்புகிறேன். இளைஞர்களால் தான் இந்த நிலையை உருவாக்க முடியும். தமிழகத்தின் அரசு உதவியுடன் தான் இது முடியும். மாநில அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். முன்னதாக ஆலங்குளம் நகருக்குள் நுழைவதற்கு முன் சாலையோரத்தில் இறங்கி இளநீர் அருந்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT