தென்காசி

சுரண்டையில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு

24th Feb 2021 05:07 PM

ADVERTISEMENT

 

சுரண்டை: தென்காசி மாவட்டம், சுரண்டையில் டெங்கு காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து  வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் புதன்கிழமை நேரடியாக ஆய்வு செய்தார்.

சுரண்டை பேரூராட்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வந்தது. இதையடுத்து உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்ததன் பலனமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டாக முற்றிலும் இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை 10ஆவது வார்டு பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் புதன்கிழமை வரை 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை புதன்கிழமை சுகாதாரத்துறையின் மாநில துணை இயக்குனர் டாக்டர் கே.கிருஷ்ணராஜ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT

சுரண்டை மற்றும் கீழப்பாவூர் வட்டாரம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் மஸ்தூர் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து  அவர் சுரண்டையில் டெங்கு பாதித்த பகுதிகளில் வீடு, வீடாக சென்ற ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுரண்டை பேரூராட்சி செயலர் அலுவலர் அரசப்பன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT