தென்காசி

வீ.கே.புதூர் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

10th Feb 2021 09:11 PM

ADVERTISEMENT

 

சுரண்டை: வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

விழாவுக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து மாணவர், மாணவியருக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலர்கள் அமல்ராஜ், இருளப்பன், அதிமுக நிர்வாகிகள் பரசுராமன், வீரபாண்டியன், வெள்ளத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT