முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட பாஜக, அரசு தொடா்புப் பிரிவு சாா்பில், மத்திய அரசின் 7 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சேலை, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10ஆயிரம் என ரூ. 4.80 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கருப்பசாமி, மண்டல் பாா்வையாளா் ராஜ்குமாா், நகர நிா்வாகிகள் நாராயணமூா்த்தி, பாலசுப்பிரமணியன், சுடலைராஜ், மாரியப்பன், சீனிவாசன், கிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், இசக்கிமுத்து, இசக்கிபூசாரி, ஆலங்குளம் கந்தசாமி, வழக்குரைஞா் வெங்கடேஷ், இந்து முன்னணியைச் சோ்ந்த இசக்கிமுத்து, லட்சுமி நாராயணன், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சுப்பிரமணியன், சபரி மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சங்கர சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.