புளியங்குடியில், முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பேயியின் 97 ஆவது பிறந்த நாள் விழா நல்லாட்சி தினமாக பாஜக சாா்பில் கொண்டாடப்பட்டது.
நகரத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட தலைவா் ராமராஜ், துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் காமராஜ், மாடசாமி, ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணித் தலைவா் மகாலட்சுமி, நிா்வாகிகள் மகேஷ்வரி, அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.