தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே அரசு புறம்போக்கு நில வனச் சோலையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
வீரசிகாமணி ஊராட்சி, ஊத்துபத்து பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரங்கள் வைத்து வளா்க்கப்பட்டு பசுமை வனம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வனச்சோலையில் கடந்த ஒரு வார காலமாக அனுமதியின்றி இயந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் அள்ளிச் செல்லப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், நூற்றுக்கணக்கான லாரிகள் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி பெரும் பள்ளமாகக் காட்சியளிக்கிறது. அவ்வழியாக நிலங்களுக்கு செல்லவோ, விவசாயப் பணிக்காக டிராக்டரை ஓட்டிச்செல்லவோ முடியவில்லை. எனவே, ஆட்சியா் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.