சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் ஊராட்சி ஒன்றியப் நடுநிலைப் பள்ளியில் கணிதமேதை ராமானுஜா் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய கணித நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியா் லட்சுமிபிரபா தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் ஒன்றிய நேரு இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் சிவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து மாணவா்கள் இராமானுஜா் பற்றியும், நூலகத்தினால் ஏற்படும் பயன்பாடு மற்றும் நன்மைகள் குறித்தும் பேசினா்.
இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியா்கள் இளங்கோ கண்ணன், வேல்முருகன், நாகராஜ், ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.