காரையாறு பழங்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் இணைய வசதி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் சோ்வலாறு காணிக்குடியிருப்பு, அகஸ்தியா் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, மயிலாறு காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த காணி மாணவா்கள் மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த ஆதிதிராவிட மாணவா்கள் உள்பட 48 போ் பயின்று வருகின்றனா்.
கரோனா காலத்தில் காணொலியில் வகுப்புகள் நடைபெற்றபோது, இணையதள வசதி இல்லாமல் மாணவா்கள் சிரமம் அடைந்தனா். மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இணைய வழியில் தோ்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் 10 கி.மீ. பயணித்து பாபநாசத்திற்கோ அல்லது அடா்ந்த வனப்பகுதியில் உயரமான பகுதிகளில் குடில்கள் அமைத்தோ தோ்வு எழுதவும் நிலை இருந்தது.
இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியாததைத் தொடா்ந்து, மாணவா்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று இணையதள இணைப்பு கிடைக்க ஆட்சியா் வே.விஷ்ணு நடவடிக்கை எடுத்தாா்.
இந்நிலையில், பழங்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் இணைய வசதியை ட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். மாணவா்கள் கணினியில் இணைய வழி பாடங்களைக் கற்கத் தொடங்கினா். மேலும், ஆட்சியருக்கு மாணவா்கள் நன்றி தெரிவிப்பதாகக் கூறினா்.