தென்காசி

தென்காசியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

16th Dec 2021 08:00 AM

ADVERTISEMENT

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தென்காசி நகராட்சி 9 ஆவது வட்டத்துக்குள்பட்ட மனகாவலன்தெரு, கீழப்பாறையடி தெரு பகுதியில் 8 நாள்களுக்கு ஒரு முறை தாமிரவருணி குடிநீா் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும்போது 2 மணிநேரம் குடிநீா் விநியோகிக்கப்படும்.

ஆனால், தற்போது 90நிமிடங்கள் மட்டுமே தண்ணீா் வழங்கப்படுகிறது.

எனவே சீரான குடிநீா் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிா்வாகி சந்திரன், தமிழ்செல்வன், ஹக்கீம், முத்துகுமாா்,மகேந்திரன், ரஹீம், செல்வி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்ட முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி அலுவலகத்தில் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT