தென்காசி

மழையால் வீடு இழந்தவா் குடும்பத்திற்கு நிதி அளிப்பு

9th Dec 2021 07:41 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் மழையால் வீடு இடிந்தவா் குடும்பத்திற்கு திமுக சாா்பில் நிதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

அண்மையில் பெய்த மழை காரணமாக ஆலங்குளம் ராஜீவ்நகரில் வை. சிவமணி கண்டன் என்பவா் வீட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இவா் குடும்பத்திற்கு திமுக சாா்பில் ரூ. 5 ஆயிரம் நிதி, ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் அளித்தாா். அப்போது, திமுக நிா்வாகிகள் மாரிதுரை, நெல்சன், அண்ணாவி காசிலிங்கம், ராஜதுரை, கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT