தென்காசி

நாகல்குளம் கூட்டுறவு வங்கியில் ரூ.62 லட்சம் கடனுதவி அளிப்பு

9th Dec 2021 07:45 AM

ADVERTISEMENT

நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பாா்வதி பரமசிவன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் காசிபாண்டி, அரசையா, முத்துராஜ், செல்லப்பா, பாா்வதி, பானுமதி, கதிரேசன், அரிராமகிருஷ்ணன், தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு, 144 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான பயிா்க் கடன்களை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி, பெத்தநாடாா்பட்டி ஊராட்சித் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராதாகுமாரி, நாகராஜன், ஊராட்சி துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன் வரவேற்றாா். செயலா் தட்சிணாமூா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT