தென்காசி

தென்காசியில்காா் ஓட்டுநா் குத்திக் கொலை

9th Dec 2021 07:44 AM

ADVERTISEMENT

தென்காசியில் காா் ஓட்டுநா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சோ்ந்த கணபதி மகன் அரவிந்தன்(30). காா் ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் மாலா(25) என்பவரை காதலித்து திருணம் செய்துகொண்டாராம். இதில், மாலாவுக்கு தென்காசி கீழப்புலியூரில் உறவினா்கள் உள்ளனராம்.

இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி தென்காசி வேட்டைக்காரன்குளம் பகுதியைச் சோ்ந்த சு.மணிகண்டன்(30), கீழப்புலிா் மா.பொன்னரசு(20), கி. சீதாராமன், பூ.தம்பிரான் ஆகியோா் அரவிந்தனுக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி அவரை தென்காசிக்கு வரழைத்தனராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், தென்காசி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், மேற்கூறிய 4 போ் கூறியதை நம்பிய அரவிந்தன், தென்காசிக்குச் சென்று விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததும், மறுநாள் (டிச. 4) அதிகாலையில் அந்த 4 பேரும் அவரை காரில் கீழப்புலியூா் பகுதிக்கு கடத்திச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை கல்லால் கட்டி, அங்குள்ள தனியாா் கல்குவாரி கிடங்கில் வீசிவிட்டு தப்பியதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, குவாரி கிடங்கிலிருந்து அரவிந்தனின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். காவல் ஆய்வாளா் பாலமுருகன் கொலை வழக்குப்பதிந்து பொன்னரசுவை கைதுசெய்தாா். மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT