தென்காசி

சங்கரன்கோவிலில் காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

9th Dec 2021 07:45 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் பெண் கிணற்றில் பிணமாக கிடந்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் கக்கன்நகா் 6 ஆவது தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகள் சுகந்தரி (33). கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த சுகந்தரி மனநலம் பாதிக்கப்பட்டவராம்.

கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டைவிட்டு சென்றவா் திரும்பவில்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தாா்.

தகவலறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் கிணற்றில் மிதந்த சுகந்தரியின் உடலை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து நகர காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT