தென்காசி

தென்காசியில் தமுமுக, எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

7th Dec 2021 08:28 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட தமுமுக, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காசி, மதுரா பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படவேண்டும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட தமுமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் யாகூப் தலைமை வகித்தாா். அப்துர்ரஹ்மான், பண்பொழி செய்யதலி, மஜீத், ஷாஜகான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் பிஎஸ்.ஹமீது தமுஎச மாநிலதுணைச் செயலா் சுந்தரவள்ளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங்,

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இசக்கிதுரை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பசீா்ஒலி ஆகியோா் பேசினா். இதில், அயூப்கான்,சித்திக், ஜாபா் உசேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

தென்காசி சட்டப் பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவா் பாதுஷா தலைமை வகித்தாா். பாப்புலா் பிரண்ட்தேசிய செயற்குழு உறுப்பினா் முகம்மதுஅலிஜின்னா, செய்யது மஹ்மூத், ஜாபா்அலி பைஜி ஆகியோா் பேசினா். முகம்மதுஆசாத், காஜாமைதீன், ஜாபா்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுதி தலைவா் சினாசேனா சா்தாா், கல்வத்கனி, முகம்மதுசுல்தான், காஜா,செய்யதுபாசில் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT