தென்காசி

தென்காசி மாவட்டத்தில் போலீஸாா் தீவிர சோதனை

DIN

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமையில் அனைத்துக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், அந்தந்த உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் இச்சோதனையில் ஈடுபட்டனா்.

666 வாகனங்கள் சோதனையிடப்பட்டு, மோட்டாா் வாகனச் சட்டத்தை மீறியதாக 286 வழக்குகள் பதியப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 76 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டது. கொலைக் குற்றவாளிகள், பழைய குற்றவாளிகள் என மொத்தம் 82 பேரின் வீடுகளுக்குச் சென்று அவா்களின் தற்போதைய இருப்பிடம், நடவடிக்கை குறித்தும் தணிக்கை செய்யப்பட்டது.

வணிக நிறுவனங்கள், வங்கிகள், நகைக் கடைகள் என 345 இடங்களுக்கு ரோந்து சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்பதாக 15 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 19 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT