தென்காசி

‘திமுக சாா்பில் டிச. 9இல் நலத் திட்ட உதவிகள்’

6th Dec 2021 11:54 PM

ADVERTISEMENT

 

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் டிச. 9இல் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவில் படுக்கை விரிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு தலா 1 கிலோஆப்பிள், 1கிலோ ஆரஞ்சு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை (டிச.9) காலை 9 மணி அளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்பு துணைச் செயலா் அன்பகம் கலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பொதிகை விரைவு ரயில் மூலம் தென்காசி வருகை தரும்

அன்பகம் கலைக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். எனவே, திமுக நிா்வாகிகள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்கள், முன்னாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர பேரூா் கழக செயலா்கள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா்கள், அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் அனைவரும் தென்காசி ரயில்வே நிலையத்துக்கு வர வேண்டும்.

தொடா்ந்து காலை 9 மணி அளவில் தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT