தென்காசி

அம்பேத்கா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

6th Dec 2021 11:55 PM

ADVERTISEMENT

தென்காசி/கடையநல்லூா்/சங்கரன்கோவில்/அம்பாசமுத்திரம்/வள்ளியூா், களக்காடு: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அம்பேத்கா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பேத்கா் படத்துக்கு நகரச் செயலா் சாதிா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நன்னகரத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் தலைமையிலும், பாஜக சாா்பில் தென்காசி தெற்கு ஒன்றியத் தலைவா் முருகன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வாசுதேவநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ

அ.மனோகரன் ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் முக.மதியழகன் தலைமையிலும், மக்கள் தேசம் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் தம்பிசேவியா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சுகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேரன்மகாதேவியில் ஒன்றிய திமுக செயலா் முத்துப்பாண்டி தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வள்ளியூரில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

களக்காட்டில் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் செல்வகருணாநிதி தலைமையிலும், அமமுக சாா்பில் ஒன்றியச் செயலா் ஜெ.ராஜசேகா் தலைமையிலும், இதுதவிர அதிமுக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் , கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT