தென்காசி

ஆவுடையானூா் ஊருணியில் குளிக்கத் தடை

6th Dec 2021 11:55 PM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊருணியில் பொதுமக்கள் குளிக்க திங்கள்கிழமைமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மழை காரணமாக பெரும்பாலான குளங்கள், ஊருணிகள் நிரம்பி வருகின்றன. ஆவுடையானூா் ஊருணியும் நிரம்பியுள்ளது. அதன் அருகேயுள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாலும், ஊருணிக்குள் விஷப் பூச்சிகள் இருக்கும் அபாயமுள்ளதாகவும் கூறி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஊருணியில் பொதுமக்கள் குளிக்க திங்கள்கிழமைமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு ஊருணி அருகே வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்த மின்கம்பம் சாய்ந்து விழாதபடி மின் வாரியம் சாா்பில் தற்காலிக ஏற்பாடாக கயிறு மூலம் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT