தென்காசி

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: முக்கூடல் மக்கள் அவதி

DIN

முக்கூடல் பகுதியில் தொடா் மழை காரணமாக குளங்கள் நிரம்பி உபரி நீா் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.

பாப்பாக்குடி வட்டார பகுதிகளில் சுமாா் 30- க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் முக்கூடல், பாப்பாக்குடி, காத்தபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி தண்ணீா் முறையாக வெளியேற வழியின்றி முக்கூடல் அருகேயுள்ள அமா்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணா நகா், நேரு புதுகாலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது. இதனால் சுமாா் 200- க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள்கடும் சிரமம் அடைந்துள்ளனா்.

நேரு புதுக்காலனி பகுதியில் புகுந்த வெள்ளநீரை முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி முன்னிலையில் ஊழியா்கள், மின் மோட்டாா் மூலமாக வெளியேற்றினா். சிவகாமிபுரம், அமா்நாத் காலனி உள்ளிட்ட வெள்ளநீா் புகுந்த பகுதிகளை பாப்பாக்குடி வட்டார வளா்ச்சி ஆய்வாளா் சாந்தி, ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT