தென்காசி

புளியங்குடி, சொக்கம்பட்டியில் இன்று மின் தடை

4th Dec 2021 01:44 AM

ADVERTISEMENT

புளியங்குடி, சொக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்டச் செயற்பொறியாளா் இரா.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி: கடையநல்லூா் மின்கோட்டத்திற்குள்பட்ட புளியங்குடி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பிற்பகல் 1 முதல் மாலை 5 வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலப்பேரி, ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பராப்பேரி, சுந்தரேசபுரம், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

வீரசிகாமணி பகுதியில்...

கடையநல்லூா் மின் கோட்டத்திற்குள்பட்ட வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பிற்பகல் 1 முதல் மாலை 5 வரை வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புக்கோவில்சந்தை, வெண்டிலிங்கபுரம், திருவேட்டநல்லூா், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, நடுவக்குறிச்சி, பட்டாடைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

Tags : கடையநல்லூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT