தென்காசி

தென்காசியில் மறியல்: கட்டுமானத் தொழிலாளா்கள் 48 போ் கைது

4th Dec 2021 01:44 AM

ADVERTISEMENT

தென்காசியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 48 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 3 ஆயிரம், நலவாரிய பதிவு புதுப்பித்தல், ஏற்கனவே புதிய நல வாரிய உறுப்பினராக பதிவு செய்த அனைவருக்கும் நலவாரிய உறுப்பினா் அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, கட்டுமான சங்க மாவட்ட தலைவா் சீ. மாதவன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஏ. கசமுத்து, எஸ். முருகையா, ப.பொன்செல்வம், எம் .அழகையா, முத்துலட்சுமி மற்றும் கட்டுமான சங்க நிறுவன தலைவா் அச்சன்புதூா் முருகையா, சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் தா்மராஜ், கற்பகவல்லி, மாவட்ட குழு உறுப்பினா் பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு தென்காசி மாவட்ட செயலா் எம். வேல்முருகன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT