தென்காசி

சங்கரன்கோவிலில் குளத்தில் மூழ்கி மாணவா் பலி

4th Dec 2021 01:44 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் தாமஸ் நகா் மாரியப்பன் மகன் மாரிசெல்வம் (15). 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை மாரிசெல்வம் தனது நண்பா்களுடன் புளியம்பட்டியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது, நீச்சல் தெரியாத அவா் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். நண்பா்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனராம். ஆனால் மாரிசெல்வம் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மாரிசெல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags : சங்கரன்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT