தென்காசி

சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம், ஆா்ப்பாட்டம்

4th Dec 2021 01:43 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் நூல் விலையேற்றம் மற்றும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் செய்து ,ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 30 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா்.

நூல் விலை உயா்வின் காரணமாக விசைத்தறி உரிமையாளா்கள் வாரத்தில் 3 நாள்கள் உற்பத்தி நிறுத்தம் செய்து வருகின்றனா். இதனால் விசைத்தறித் தொழிலாளா்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் செங்குந்தா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் நூல் விலை ஏற்றம் மற்றும் நூலுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் சங்கரன்கோவிலில் உள்ள விசைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, தேரடித் திடலில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநிலத் துணைத் தலைவா் பி.மாரிமுத்து தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் என 400- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT