தென்காசி

வாசுதேவநல்லூரில் ‘இல்லம் தேடி கல்வி‘பிரசாரம்

2nd Dec 2021 11:27 PM

ADVERTISEMENT

 வாசுதேவநல்லூரில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ குறித்த பிரசார கலைப்பயணம் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிவையில், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம், வெள்ளானைக்கோட்டை, ரத்தினபுரி, தாருகாபுரம் ஆகிய இடங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், பறை மற்றும் நாடகம் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகரன், மேற்பாா்வையாளா் அப்துல் காதா், ஆசிரியா் பயிற்றுநா்கள் சண்முகவேலு, காளிராஜ், ஆசிரியா்கள் மியான்ஷா, நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழிப்புணா்வு பிரசாரப் பயணத்தில் பங்கேற்ற மாணவா்களுக்கு சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவா் ராம்குமாா், துணைத் தலைவா் ராமலட்சுமி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

ADVERTISEMENT

Tags : கடையநல்லூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT